• Lorem Ipsum Dolor

    This is a sample description text for the slide.

  • Lorem Ipsum Dolor

    This is a sample description text for the slide.

  • Lorem Ipsum Dolor

    This is a sample description text for the slide.

யாழில் (Jaffna) பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. இந்த ஏலம் யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணை தாமரை வீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலய நிர்வாக சபை இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர். இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு இழப்பீடு: வெளியான மகிழ்ச்சி தகவல் மாம்பழத்தை ஏலத்தில் இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம்Read More →

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு உயிரிழப்பு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நீரில் மூழ்கி 17பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2025.06.01 நேற்று முன்தினம் முல்லைத்தீவு – குமுழமுனைப் பகுதியில் கோவில் தீர்த்தக்கேணியில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கோரிக்கை இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன் பிரணவன் ஆகியோருமாக ஒரேநாளில் நான்குபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறாக ஒரேநாளில் நான்குபேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையில் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறுRead More →